அடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை

அடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை

Adadaa Logo

அடாடா

த‌மிழ்ப்ப‌திவு

த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை

இந்த சேவையானது WordPress செயலியால் நிறுவப்பட்டது. WordPress என்பது ஒரு இலவச வலைப் பதிவு சேவை. இது Blogger போன்றது. நீங்கள் ஏற்கனவே WordPress வலைப்பதிவு சேவையை உபயோகிப்பவராக இருந்தால், WordPress இல் என்ன வசதிகள் கிடைக்கிறதோ அதில் அனேகமானவை இங்கும் கிடைக்கும்.

WordPress இல் இருப்பது தான் இங்கும் என்றால் என்ன வித்தியாசம் என்று யோசிப்பது விள‌ங்குகிற‌து. வேர்ட்பிறஸைக் கொண்டியங்கும் இந்த அடடா தமிழ் வலைப்பதிவு சேவையில் நீங்கள் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். வலைப்பதிவில் உள்ள இடுகை, கருத்து [பின்னூட்டம்], வகை, tag என்று எங்கு வேண்டுமென்றாலும், நேரடியாக தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்.  வேறு எந்த தமிழ் தட்டச்சு செய்ய உதவும் இணையத்தளத்திற்கு செல்லவேண்டிய அவசியமோ (அ) தமிழ் மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமோ கிடையாது.

நீங்கள் இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையை தமிழில் தட்டச்சு செய்ய வேறெந்த இணையத் தளத்திற்கோ (அ) த‌மிழ் த‌ட்ட‌ச்சு மென்பொருள் எதையுமோ நாட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நேரடியாக Post / இடுகையிலேயே தட்டச்சுகிறேன். உங்க‌ள் சொந்த‌ க‌ணியில் இருந்து ம‌ட்டும‌ன்றி இனிமேல், ஒன்லைன் சென்ற‌ர்ஸ் [online centres], வேலைத்த‌ள‌ங்க‌ள் போன்ற‌ இட‌ங்க‌ளில் இருந்தும் இடுகைக‌ள் இட‌லாம். இடுகையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு இடுகையின் Comments / க‌ருத்து (அ) பின்னூட்டத்திலும் தமிழிலேயே நேரடியாக தட்டச்சு செய்யலாம். ஏன் உல‌கில் எந்த‌ நாட்டிலிருந்தும் உங்கள் இடுகைக்கு த‌மிழில் கருத்துத் தெரிவிக்க உங்கள் அபிமானிகள் இனி வேறு ஒரு இணையத் தளத்திற்குச் சென்று (அ) மென்பொருள் எதையும் அவ‌ர்க‌ள‌து க‌ண‌னியில் நிறுவி தட்டச்சு பண்ண வேண்டுமே என்று சலித்துக்கொள்ள மாட்டார்கள்.  எப்ப‌டி த‌மிழில் நேர‌டியாக‌ உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவில் த‌ட்ட‌ச்சு செய்ய‌லாம் என்று விள‌க்க‌மாக‌ அறிய‌ இங்கே சொடுக்குங்க‌ள்:

அடடா தமிழ் தட்டச்சு

எங்கே இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் தான் இட்டுப் பாருங்களேன்!

அட‌டா வில் த‌மிழ் த‌ட்ட‌ச்சு செய்ய‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் த‌மிழ் எழுதி  hiGopi அவ‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ த‌க‌டூர் ஆகும்.

த‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சு செய்ய‌லாம் எனும் மிக‌ இல‌குவான‌ ப‌ய‌ன்பாட்டைப் போல் மேலும் ப‌ல‌ த‌மிழ் ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌ய‌ன்பாடுக‌ள் அட‌டா வில் உள்ள‌து. அடடா வில் வலைப்பதிவைத் தொடங்கினால்:

 • உங்கள் இடுகைகள் கீழுள்ள‌ வலைப்பதிவுத் திரட்டிகளில் [நீங்கள் சேர்க்காமலேயே] தானாகவே தோன்றும் வசதி:
  தமிழ் மணம்,
  தேன்கூடு,
  த‌மிழ்வெளி,
  திர‌ட்டி
 • நீங்க‌ள் நிறுவாம‌லே கீழுள்ள‌ ப‌ட்டைக‌ள் செய‌ற்பாட்டிற்கு வ‌ரும்:
  த‌மிழ்ம‌ண‌ம் ப‌திவுப்ப‌ட்டை,
  த‌மிழிஸ் ஓட்ட‌ளிப்பு ப‌ட்டை
 • இவை போன்று ம‌ற்ற‌ய‌ த‌மிழ் தொட‌ர்பு இணைய‌ங்க‌ளிலும் அட‌டா வின் உங்க‌ள் இடுகைக‌ள், உங்க‌ளுக்கு மேல‌திக‌ வேலையில்லாம‌ல், தானாக‌த் தெரிய‌ முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌:
  மாற்று,
  தமிழ் கணிமை

வலைப் பதிவு என்ன என்று யோசிப்பவருக்கு ஒரு சிறு சுருக்கம்
வலைப் பதிவு என்பது நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தில் தோன்றிய அபிலாசைகளை இணையத்தில் இலகுவாகவும், வேகமாகவும் பதிவு செய்து கொள்ள உபயோகிக்கப்படுவது. இதற்கு உங்களுக்கு எந்த இணைய கணினி மொழிகளும் [HTML, PHP] தெரியத் தேவையில்லை.

உங்களுக்கு மின்னஞ்சல் உபயோகிக்கத் தெரியுமா? MS Word செயலியை உபயோகிக்கத் தெரியுமா? இவ்வளவே அதிகமானது. பயப்படாமல், நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்.

உங்கள் கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள், ஆய்வுகள், விளக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று பலப் பல விடயங்களை இணையத்தில் வேகமாகப் பிரசுரிக்க இந்த சேவை பயன்படுத்தப்படலாம்.

இதோ உங்க‌ளுக்கென்று ஒரு த‌னித் த‌மிழ்ப்ப‌திவு ஒன்றை ஆர‌ம்பிக்க‌ இங்கே சொடுக்குங்க‌ள்:

எனக்கும் ஒரு இலவச தமிழ்ப்பதிவு

மேலும் ப‌டிக்க‌: அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

Tags: