தமிழ் கப்சா

தமிழ் கப்சா

உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவில் க‌ச‌டுக‌ள் வ‌ந்து குவியாம‌ல் த‌விர்க்க‌ த‌னித்துவ‌மான‌ த‌மிழ்-ஆங்கில‌ க‌ப்சா. அதாவ‌து த‌மிழிலோ அல்ல‌து ஆங்கில‌த்திலோ தெரியும் க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம். இந்த‌ த‌மிழ் க‌ப்சாவால் ஒரு மென்பொருளால் உருவாக்க‌ப்ப‌டும் எந்த‌ கச‌டுக‌ளும் வ‌ராம‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகிற‌து. கார‌ண‌ம், த‌ற்போது பாவ‌னையில் இருக்கும் க‌ச‌டு உருவாக்கும் மென்பொருட்க‌ளுக்கு த‌மிழ் தெரியாது. ஆக‌வே உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவு முற்றுமுழுதாக‌ க‌ச‌டு அற்ற‌ ப‌திவாக‌ இருக்கும். த‌மிழில் க‌ப்சா தோன்றுவ‌து இது தான் முத‌ல்முறையான‌து அல்ல‌. வேறு ப‌ல‌ த‌மிழ் க‌ப்சா செருகிக‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால், அட‌டா த‌மிழ் க‌ப்சாவால் உருவாக்க‌ப்ப‌டுவ‌து த‌மிழும் ஆங்கில‌மும் க‌ல‌ந்த‌து ஆனால், எதாவ‌து ஒன்றைத் த‌ட்ட‌ச்சினாலே போதுமான‌து. இத‌ன் ப‌ய‌ன் என்ன‌வென்றால், த‌மிழ் த‌ட்ட‌ச்ச‌த் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழில் க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம், தெரியாவ‌த‌ர்க‌ள் ஆங்கில‌ க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம். ஆக‌வே, உங்க‌ள் இடுகைக்கு த‌மிழில் த‌ட்ட‌ச்சு தெரிந்த‌வ‌ர் ம‌ட்டும‌ன்றி ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளும் க‌ருத்துக்க‌ள் இட‌லாம்.

கசடு அல்லது spam என்று சொல்ல‌க்கூடிய‌ தேவைய‌ற்ற‌ [விள‌ம்ப‌ர‌ங்க‌ள், வ‌ய‌துக்கு வ‌ந்தோர் ம‌ட்டும் ஆன‌ த‌க‌வ‌ல்க‌ள்] க‌ருத்துக்க‌ள் வ‌ராம‌ல் க‌ப்சா [anti-spam captcha] என்று சொல்ல‌க்கூடிய‌ ஒன்றை அனேக‌மாக‌ எல்லா இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலும் காண‌லாம். அட‌டா த‌மிழ் க‌ப்சா உங்க‌ள் ப‌திவிற்கு முற்றுமுழுதாக‌ ஒரு த‌மிழ்ப்ப‌திவு என்ற‌ உணர்வை ஏற்ப‌டுத்துகிற‌து.

எனக்கும் ஒரு இலவச தமிழ்ப்பதிவு

Tags: