அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

அன்பார்ந்த தமிழர்களே,

முதற்கண், வருங்காலத்திற்காய் தம் இன்னுயிர் ஈன்ற தமிழ் மாவீரர்களுக்கு என் சிரம் தாள் வணக்கம்.

மாவீரர் நாளில் தொடங்கவே எண்ணியிருந்தேன். ஆனால், சில தடங்கல்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டுவிட்டது.

அடடா தமிழ் வலைப் பதிவு சேவை இன்று தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது WordPress செயலியால் நிறுவப்பட்டது. WordPress என்பது ஒரு இலவச வலைப் பதிவு சேவை. இது Blogger போன்றது. ஆனால், WordPress ஒரு திறந்த வெளி மூலம் கொண்டது. அதாவது, அவர்களுடைய செயலியை இலவசமாக எவரும் நிறுவிக்கொள்ளலாம்.

கடந்த ஒரு மாத காலமாக, WordPress ஐ பல தடவை நிறுவி, பல திருத்தங்கள் செய்து, பல மாற்றங்கள், தமிழுக்காய் செய்து இன்று இந்த அடடா தமிழ் வலைப் பதிவு சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீங்கள் ஏற்கனவே WordPress வலைப்பதிவு சேவையை உபயோகிப்பவராக இருந்தால், WordPress இல் என்ன வசதிகள் கிடைக்கிறதோ அதில் அனேகமானவை இங்கும் கிடைக்கும். இதற்காக நான் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. ஏனெனில், இது அவர்களுடைய செயலி தானே!

WordPress இல் இருப்பது தான் இங்கும் என்றால் என்ன வித்தியாசம் என்று யோசிப்பது எனக்குத் தெரிகிறது. நீங்கள் இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையை நான் தமிழில் தட்டச்சு செய்ய வேறெந்த இணையத் தளத்திற்கும் செல்லவில்லை. நேரடியாக Post / இடுகையிலேயே தட்டச்சுகிறேன். இடுகையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு இடுகையின் Comments / பின்னூட்டத்திலும் தமிழிலேயே நேரடியாக தட்டச்சு செய்யலாம். ஆகவே, உங்கள் இடுகைக்கு கருத்துத் தெரிவிக்க உங்கள் அபிமானிகள் இனி வேறு ஒரு இணையத் தளத்திற்கு சென்று தட்டச்சு பண்ண வேணுமே என்று சலித்துக்கொள்ள மாட்டார்கள். எங்கே இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் தான் இட்டுப் பாருங்களேன்!

இதற்காக hiGopi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இடுகையை ஆரம்பிக்கும்போது, இரண்டு விதமான tab கள் இருக்கும். Visual மற்றும் Code. Code என்னும் tab ஐ சொடுக்கி அதில் தமிழை தட்டச்சு செய்துகொள்ளலாம். FireFox, மற்றும் Internet Explorer உலாவிகளில் இவை வேலை செய்யும்.

வலைப் பதிவு என்ன என்று யோசிப்பவருக்கு ஒரு சிறு சுருக்கம்:
வலைப் பதிவு என்பது நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தில் தோன்றிய அபிலாசைகளை இணையத்தில் இலகுவாகவும், வேகமாகவும் பதிவு செய்து கொள்ள உபயோகிக்கப்படுவது. இதற்கு உங்களுக்கு எந்த இணைய கணினி மொழிகளும் [HTML, PHP] தெரியத் தேவையில்லை.

உங்களுக்கு மின்னஞ்சல் உபயோகிக்கத் தெரியுமா? MS Word செயலியை உபயோகிக்கத் தெரியுமா? இவ்வளவே அதிகமானது. பயப்படாமல், நீங்களும் வலைப் பதிவு ஆரம்பிக்கலாம்.

உங்கள் கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள், ஆய்வுகள், விளக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று பலப் பல விடயங்களை இணையத்தில் வேகமாகப் பிரசுரிக்க இந்த சேவை பயன்படுத்தப்படலாம்.

உங்கள் எண்ணங்களை எழுத்துக்காகினால் மட்டும் போதாது மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று அறிய ஆவலா? கவலை விடுங்கள். அடடா வில் இடும் ஒவ்வொரு இடுகைக்கும் [ஆக்கத்திற்கும்] மற்றவர்கள் இலகுவாக கருத்துத் தெரிவிக்கலாம். அதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

நீங்களே ஒருமுறை அடடா வை சோதனை செய்து தான் பாருங்களேன்.
blog: http://1soothanai.adadaa.com/
username: soothanai
password: thamizha
Login: http://1soothanai.adadaa.com/wp-admin/

தொலை நோக்குப் பார்வை:
வருங்காலத்தில் அடடா தமிழ் வலைப் பதிவு செயலியில் எங்கும் [Post Slug, Categories, etc.] தமிழை நேரடியாக தட்டச்சு செய்யும் வசதி.
அடடா வில் வலைப் பதிவைத் தொடங்கினால், உங்கள் இடுகைகள் தமிழ் மணம், தேன்கூடு என்பன போன்ற வலைப் பதிவுத் திரட்டிகளில் [நீங்கள் சேர்க்காமலேயே] தானாகவே தோன்றும் வசதி.
மிகவும் முக்கியமாக, இந்த அடடா தமிழ் வலைப் பதிவு செயலியை முற்றுமுழுதாக தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

இதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும், உதவியும் வேண்டும். வருகிற தைப் பொங்கல் தினத்தன்று அடடா தமிழில் இருக்க முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
அடடா அட்டகாசம்

Tags: