கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்

கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்

உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ள் நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்ச‌லாம். இத‌ற்காக‌ எந்த‌ ஒரு மென்பொருளையும் அவ‌ர்க‌ள் நிறுவ‌த் தேவையில்லை. இத‌ன் உண்மையான‌ ப‌ய‌ன் என்ன‌வென்றால், உல‌கில் எந்த‌ மூலையில் இருந்தாலும் உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ள், இல‌குவாக நேர‌டியாக‌வே த‌மிழில் க‌ருத்துத் தெரிவிக்க‌லாம். த‌ங்க‌ள் க‌ணினியில் த‌மிழ் மென்பொருள் நிறுவ‌வேண்டும் என்ற‌ க‌வ‌லையே இல்லை. ப‌ய‌ன‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌ த‌மிழ்ங்கில‌ம், த‌மிழ் 99, அல்ல‌து பாமினி த‌ட்ட‌ச்சு முறைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ட்ட‌ச்ச‌லாம். ஒரு முறையான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சுத் தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்லாம‌ல், அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ முறையை இல‌குவாக‌ ஒரு கிளிக் செய்து உங்க‌ள் இடுகைக‌ளுக்கு க‌ருத்துப் போட‌லாம்.

அடடா தமிழ் தட்டச்சு பட்டை

மேலே உள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் மேல் தோன்றும் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் [bar] கிடைக்கும் மூன்று வித‌மான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறைக‌ளில் இருந்து விருந்தின‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு அபிமான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையைத் தெரிவுசெய்து த‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சுவார்க‌ள்.

எனக்கும் ஒரு இலவச தமிழ்ப்பதிவு

Tags: